திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கரோனா கட்டுக்குள் இருந்தது. ஆனால் இந்த மாதத் தொடக்கம் முதல் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் தினமும் 10-க்கும் குறைவாக இருந்தபோதும், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் மின் மயானத்துக்கு தினமும் அதிகபட்சம் நகர் மற் றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 5 உடல்களே எரி யூட்டப்பட்டன. தற்போது 20-க்கும் மேற்பட்ட உடல்கள் கொண்டு வரப்படுகின்றன. மின்மயான பணியாளர்கள் தினமும் 20 மணி நேரத்துக்கும் மேலாகப் பணிபுரிய வேண்டியுள்ளது. இங்கு எரியூட்டத் தாமதம் ஆவதால் அருகில் உள்ள எரியோடு மயானத்துக்கு உடல்களை அனுப்புகின்றனர்.
திண்டுக்கல், பழநி உள்ளிட்ட நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டன. தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி விட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago