அரசு மருத்துவமனைகளின் கரோனா வார்டுகளில் சிகிச்சை பெறுவோர் மற்றும் அவர்களு டன் இருப்பவர்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தில் முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று என்சிசி, என்எஸ்எஸ், சாரண- சாரணியர் மற்றும் இளைஞர்கள் தன்னார்வலர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 60 தன்னார்வலர்களின் பணி தொடங்கி வைக்கப்பட்டது. தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியபோது, “கரோனா தடுப்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள தன்னார்வலர்கள், சிகிச்சைக்காக வரும் கரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களு டன் வருவோருக்கு அச்சத்தைப் போக்க வேண்டும்” என்றார்.
சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியது: தமிழகம் முழுவதும் என்எஸ்எஸ், என்சிசி பிரிவில் 4 லட்சம் பேர் உள்ளனர். முதல்கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் 3 ஷிப்ட்களாக பணிபுரிவார்கள்.
இவர்கள் மருத்துவமனைக்கு வருவோரிடம் கனிவாக பேசுவது, கரோனா விதிமுறைகளை கடைபிடிக்கச் செய்வது, கரோனா தொற்றாளர்கள், உடனிருப்பவர் களுக்கு தேவையான உதவி களை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். இவர்களால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணிச்சுமை குறைந்து, மன உளைச்சல் போக்கப்படும். தொடர்ந்து, இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப் பட உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், எம்எல்ஏ வை.முத்துராஜா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாநில நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago