கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு - முதல்கட்ட கரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கூட்டுறவு சங்க வளாகத்தில் நேற்றுநடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். செய்தித்துறைஅமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு, முதல்கட்ட நிவாரணத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது, "இத்திட்டத்தின் மூலமாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7,30,279 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். " என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, சார் ஆட்சியர் பவன்குமார், கூட்டுறவு இணைப் பதிவாளர் பிரபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

போலீஸாருக்கு பாராட்டு

பல்வேறு இடங்களில் மழை பெய்த நிலையிலும், அதை பொருட்படுத்தாமல் நியாயவிலைக் கடைகள் மற்றும் சாலைகளில் ஊரடங்கு கடமை ஆற்றிய போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல் பாராட்டு தெரிவித்தார்.

பல்லடம் நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நேற்று டிரோன் கேமரா மூலமாக போலீஸார் கண்காணித்தனர். பல்லடம் பேருந்து நிலையம், மங்கலம் சாலை, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

உதகை

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா இளித்தொரை கிராமம் மற்றும் குன்னூர் ரயில்வே ஊழியர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி மாவட்டத்தில் 402 ரேஷன் கடைகளிலுள்ள 2 லட்சத்து 16 ஆயிரத்து 86 குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்றுமுதல் நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்