திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உயிரிழப்புகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில், திருப்பூரை சேர்ந்த 64 வயது ஆண் தனியார் மருத்துவமனையிலும், திருப்பூரை சேர்ந்த 61, 56 வயது ஆண்கள் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 71 வயது ஆண் கோவை தனியார் மருத்துவமனையிலும், 53 வயது ஆண் சேலம் தனியார் மருத்துவமனையிலும், 67 வயது ஆண், 64 வயது பெண் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தற்போது, மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 272-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,210 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,179 ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago