நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குன்னூரில் 6 இடங்கள், உதகை -கூடலூர் சாலை, பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் விழுந்தமரங்களை,தீயணைப்புத் துறையினர் அகற்றினர். கூடலூர்,பந்தலூர் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அங்கு 160 பாதுகாப்பு முகாம்கள் திறக்கப்பட்டு, மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 283 பேரிடர் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன, 42 மண்டல குழுக்கள் உட்பட அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து களத்தில் உள்ளனர். அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பு முகாம்களில் தங்கலாம். இதற்காக அந்தந்தப் பகுதி வருவாய்த் துறையினரை பொதுமக்கள் அணுக வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தொடர் மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதன்பேரில் கமாண்டர் கணேஷ் பிரசாத் தலைமையில் 25 பேர் கொண்ட தேசியபேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.
மழை அளவு (மி.மீ.)
நேற்று காலை வரையிலான நிலவரப்படி தேவாலாவில் அதிகபட்சம் 137 மி.மீ. மழை பதிவானது.கிண்ணக்கொரை-100, சேரங்கோடு-72, பந்தலூர்-56, கெத்தை-52, பாலகொலா-45, குந்தா- 39, கூடலூர்-35, உதகை-34, அவலாஞ்சி-32, குன்னூர்-31,எமரால்டு-28, கேத்தி-26, அப்பர் பவானி- 25, நடுவட்டம்-20, பர்லியாறு-19, கல்லட்டி-16.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago