30 நாளும் ரேஷன் பொருட்களை விநியோகிக்க முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை : கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

30 நாட்களும் ரேஷன் பொருட் களை விநியோகம் செய்யும் நடைமுறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் அருகே பிள்ளை யார்நத்தம், சித்தையன்கோட்டை ஆகிய கிராமங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக கரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கி பேசியதாவது: பிள்ளையார்நத்தம் பகுதியில் 678 குடும்ப அட்டைதாரர்களுக்கும், சித்தையன்கோட்டையில் 573 குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரணத் தொகையாக முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மாதத்தில் 30 நாட்களும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நடைமுறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்