புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே 2,600 லிட்டர் சாராய ஊறல் நேற்று அழிக்கப்பட்டது.
கரோனா ஊரடங்கை யொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த சமயத்தில், சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதற்காக வடகாடு அருகே உள்ள கருக்காகுறிச்சி தெற்கில் உள்ள காட்டுப் பகுதியில் பேரல்களில் சாராய ஊறல் போடப்பட்டு இருப்பதாக எஸ்.பி எல்.பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது தலைமையில் வடகாடு காவல் நிலையத்தினர் மற்றும் ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் நேற்று கருக்காகுறிச்சி தெற்கு காட்டுப்பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது, 8 பேரல்களில் இருந்த சுமார் 2 ஆயிரத்து 600 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago