வேலூர் மாநகராட்சி அலுவலகத் தில் முழு வீச்சில் செயல்பட உள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுளை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் விவரங்களை அறிய 1077 அல்லது 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகளின் விவரத்தையும் ஆக்சிஜன் வசதி, ஐசியு வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளின் விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.
தற்போது, வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பட தொடங்கியுள்ளது. ஆரம்ப கட்ட செயல்பாட்டில் இருக்கும் இந்த கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் 10 பேர் பணியாற்றி வரும் இந்த கட்டுப்பாட்டு அறையை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மணிவண்ணன், மாநகராட்சி பொறியாளர் சீனிவாசன், மாநகர நல அலுவலர் டாக்டர் சித்ரசேனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இது தொடர்பாக மாநகர நல அலுவலர் டாக்டர் சித்ரசேனா கூறும்போது, ‘‘இந்த கட்டுப்பாட்டு அறை முழுமையாக செயல்பட தனியாக மென்பொருள் வழங்கியுள்ளனர். இதனை கரோனா சிகிச்சை அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தும்போது, அங்குள்ள கரோனா வார்டு படுக்கைகளின் காலி எண்ணிக்கை விவரங்களை துல்லியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி அறிய முடியும். இந்த மென்பொருள் பயன்பாட்டுக்கான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. ஒரு வாரத்துக்குள் இந்த கட்டுப்பாட்டு அறை முழு வீச்சில் செயல்படும்.
அதன்பிறகு இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் எந்த மருத்துவமனையில் எந்த வகையான படுக்கைகள் காலியாக உள்ளது என்பதை சுலபமாக தெரிந்துகொள்ள முடியும். இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து மற்ற பணிகளையும் ஒருங்கிணைக்கப்பட உள்ளது’’ என தெரிவித்தார்.
கரோனா வார்டு படுக்கைகளின் காலி எண்ணிக்கை விவரங்களை துல்லியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி அறிய முடியும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago