வேலூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்டத்துக்கு கரோனா தடுப்பு கண்காணிப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், டிஐஜி காமினி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன் (வேலூர்), அமலு விஜயன் (குடியாத்தம்), ஜெகன்மூர்த்தி (கே.வி.குப்பம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேலூர் மாவட் டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் துரை முருகன் பேசும்போது, ‘‘கரோனா தடுப்பு பணியில் மாவட்ட அளவில் அனைத்துத் துறை அலுவலர்கள் சிறப்பாக செயல்படுவது திருப்தி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, விஐடி பல்கலைக்கழகம், குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு கரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள், குறைந்தளவு பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்து சித்தா மற்றும் அலோபதி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படு கிறது. இவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி நோயாளிகளை பாதுகாக்க வேண்டும். மாவட்டத் துக்கு தேவையான அளவு ஆக்சிஜன், படுக்கை வசதிகள், சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் கிடைக்க முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறும் போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் அதிக அளவு படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு தேவைப்படுகிறது. இதற்காக, வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 1,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. அதனை தவிர அமைச்சர் காந்தியும் கூடுதல் படுக் கைகள் தருவதாக கூறியுள்ளார். இம்மாவட்டத்தில் கரோனாவை சிறப்பாக கையாள்கின்றனர். இதற்காக மாவட்ட நிர்வாகத்துக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். உயிர்களை காப் பாற்ற இந்த அரசு முழு முயற்சி செய்கிறது.
ஆனால், ஆக்சிஜன் பற்றாக் குறை உள்ளது. அதனை போக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மக்களிடத்திலே போதிய விழிப்புணர்வு இல்லா விட்டால் கரோனா பெருந் தொற்றை கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago