நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக மேலும் 8 மருத்துவமனைகளில் கூடுதலாக 170 படுக்கைவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா்ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் கூறிய தாவது: நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு அந்நோயாளிகளுக்கு உதவும் வகையில் மாவட்டத்தில் உள்ள 8 தனியாா் மருத்துவமனைகளில் கூடுதலாக 170 படுக்கைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
இதில் உதகையில் எஸ்.எம்.மருத்துவமனையில் 15 படுக்கைகள், சிவசக்தி மருத்துவமனையில் 20 படுக்கைகள், குன்னூரில் நான்கெம் மருத்துவமனையில் 15 படுக்கைகள், சகாயமாதா மருத்துவமனையில் 20 படுக்கைகள், சாய் ஹீலிங் சென்டரில் 25 படுக்கைகள், கோத்தகிரியில் கே.எம்.எப். மருத்துவமனையில் 25 படுக்கைகள்,கூடலூரில் அஸ்வினி மருத்துவமனையில் 25 படுக்கைகள், புஷ்பகிரி மருத்துவமனையில் 25 படுக்கைகள் என மொத்தம் 170 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago