ராம்கோ சிமெண்ட் ஆலையில் - ஆக்சிஜன் தயாரிப்பு நிலையம் திறப்பு :

By செய்திப்பிரிவு

விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் உள்ள ராம்கோ சிமெண்ட் ஆலையில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கு ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலை ரூ.50 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இதை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று மாலை திறந்து வைத்தனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 42 முதல் 48 சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரப்பி அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது பூஸ்டர் யூனிட் இல்லாததால் உடனடித் தேவைக்காக 3 ஏர் ரிசிவர் டேங்குகள் மூலம் ஆக்சிஜன் 20 முதல் 22 சிலிண்டர்களுக்கு வழங்க முடியும். பூஸ்டர் யூனிட் கிடைத்தவுடன் தினமும் 42 முதல் 48 சிலிண்டர்கள் வரை ஆக்சிஜன் நிரப்பி அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் கண்ணன், வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், சீனிவாசன் எம்எல்ஏ, ராம்கோ நிறுவன மூத்த துணைத் தலைவர் (உற்பத்தி) ராமலிங்கம், பொது மேலாளர் (கணக்கு மற்றும் நிர்வாகம்) மணிகண்டன், பொது மேலாளர் (பொறியியல்) கண் ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்