கரோனா ஊரடங்கால், காவேரிப் பட்டணத்தில் `நிப்பட்'தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு, குறு தொழிற்சாலைகள் நடத்து பவர்கள், தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள வீடுகளில் `நிப்பட்'தயாரிப்பில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு இயந்திரங்கள் பயன்பாடு இல்லாமல், கையால் தயார் செய்யப்படும் `நிப்பட்'டிற்கு தனி சுவை என்பதால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு `நிப்பட்'விற்பனை சரிந்து வருவதாகவும், ஆட்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் வேதனை யுடன் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாககாவேரிப் பட்டணத்தில் `நிப்பட்'தொழிற் சாலை நடத்துபவர் கள் சிலர் கூறியதாவது:
காவேரிப்பட்டணத்தில், பால்கோவா, `நிப்பட்', அரிசி முறுக்கு தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வரு கின்றன. குறிப்பாக `நிப்பட்' தொழிலில், ஏராளமான குடும்பத் தினர் ஈடுபட்டு வருகின்றனர். ரசாயன கலப்படம் இல்லாமல் தயாரிக்கப்படும் `நிப்பட்'க்கு வெளிமாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஊரடங்கு தொடங்கியது முதலே `நிப்பட்' வியாபாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இங்கு தொழிற்சாலைகளில் வேலை செய்ததொழிலாளர்கள் 50 சதவீதத்திற்கு மேல் மாற்று வேலைக்குச் சென்றுவிட்டனர். இதனால் ஆட்கள் பற்றாக் குறையால் சிரமம் அடைந்து `நிப்பட்' தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் கரோனா ஊரடங்கால் கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.
இதனால் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் சரக்குகள் விற்பனை அனுப்ப முடியாமல் வீணாகிறது. இதனால் இழப்புகளை சந்தித்துவருகிறோம். உள்ளூர் விற்பனையும் பாதிக்கப் பட்டுள்ளது.
எனவே, நலிவுற்ற சிறுகுறு தொழிற்சாலைகள் நடத்து பவர்கள் மற்றும் தொழிலாளர் களுக்கு அரசு சிறப்பு கடனுதவி அளித்து வாழ்வாதாரம் காக்க முன் வர வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago