பனியன் நிறுவனங்கள் இன்று (மே14) முதல் மூடப்படும் நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல, வடமாநிலத் தொழிலாளர்கள் பலரும் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
கரோனாவின் பாதிப்பு அதிக மாக இருந்ததால், தொழில் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி முதல் வரும்24-ம் தேதி வரை, பனியன் நிறுவனங்களை மூடுவது என முடிவு செய்யப்பட்டது. இதனால் திருப்பூரில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ரயில் மூலம், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும், வடமாநிலத் தொழிலாளர்களும், தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்லத் தொடங்கி விட்டனர்.
தற்போது பனியன் நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, பலரும் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள். திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையத்தில், நீண்ட வரிசையில் காத்திருந்து வடமாநிலத் தொழிலாளர்கள், பயணச்சீட்டை முன்பதிவை செய்து வருகிறார்கள். இதனால், ரயில் நிலையத்தில் நேற்று கூட்டம் அலைமோதியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago