கல்பாக்கம் அணுசக்தி துறை மருத்துவமனையில் - கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் : மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ. ஜான் லூயிஸுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் இ.சங்கர் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது.

கல்பாக்கம் நகரத்தில் அணுசக்தி துறையின்கீழ் கல்பாக்கம், அணுபுரம் ஆகிய இரு இடங்களில் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இம்மருத்துவமனைகளில், கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அணுசக்தி துறையில் பணியாற்றும் ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் சென்னைக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மேலும், கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் அணுசக்தி துறை மருத்துவமனையில் அளிக்கப்படுவதில்லை. தற்போது இம்மாவட்டத்தில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. அணுசக்தி துறை மருத்துவமனையில் சுமார் 100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், கரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. இந்நிலை மாற்றப்பட்டு, அணுசக்திதுறை ஊழியர்கள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் இம்மருத்துவமனை செயல்பட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்