விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் உயிர் வேதியியல் துறை சார்பாக ‘கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி’ என்னும் தலைப்பில் காணொலி கருத்தரங்கம் அண்மையில் நடத்தப்பட்டது. வலைதளம் வாயிலாக இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய கல்வி குழுமத்தின் செயலாளர் செந்தில்குமார், உலக அளவில் வேகமாக பரவி வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு வழங்கும் தடுப்பூசியின் அற்புதமான செயல்திறன் மற்றும் தடுப்பூசி போடுவதற்கான இரண்டு கால தவணைகள் குறித்து பகிர்ந்து கொண்டார். அனைத்து பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதை முன்னுதாரணமாக கூறி நோய் பரவல் குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவமனை மற்றும் கல்லூரியின் உடலியல் துறை பேராசிரியர் மங்களவள்ளி உரையாற்றினார். முன்னதாக உயிர் வேதியியல் துறையின் இணை பேராசிரியர் முனைவர் .கலைமதி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி யின் ஆராய்ச்சி புல முதன்மையர் உத்ரா அறிமுக உரையாற்றினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் பிருந்தா நோக்க உரையாற்றினார். பதிவாளர் முனைவர் சௌந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
இக்காணொலி கருத்தரங்கில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும்ஆசிரியர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
‘கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி’ என்னும் தலைப்பில் காணொலி கருத்தரங்கம் அண்மையில் நடத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago