கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளைப் பாதுகாக்க

மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் உள்நோயாளிகளாக இருந்து சிகிச்சை பெறுபவர்களின் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பராமரிக்க இயலாத சூழல் இருந்தால் பெற்றோர் சிகிச்சை முடிந்து வரும் வரை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ குழந்தைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தகைய குழந்தைகளுக்கு குழந்தைகள் இல்லங்களில் உணவுடன் கூடிய தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு மருத்துவ உதவி, பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதனால் இதுபோன்ற குழந்தைகள் குறித்து 1098 என்ற இலவச எண்ணிலும், சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக எண் 0451-2460725, 0451-2904070 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்