முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக 2 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 12-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒரு நாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி பல்வேறு துறைகளில் பணிபுரிந்துவரும் 2 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள்ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மே மாத ஊதியத்திலேயே ஒருநாள் ஊதியப் பிடித்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago