சிவகங்கை அரசு மருத்துவமனையில் - அறநிலையத்துறை மூலம் 1,300 பேருக்கு மதிய உணவு :

By செய்திப்பிரிவு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறநிலையத்துறை சார்பில் நோயாளிகள், பாதுகாவலர்கள் என 1,300 பேருக்கு தினமும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை பழைய அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பேசியதாவது: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில், கொல்லங்குடி வெட்டுடையார் கோயில், காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில், கொப்புடையநாயகி அம்மன் கோயில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் ஆகியவற்றின் மூலம் தினமும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்களது பாதுகாவலர்கள் என 1,300 பேருக்கு மதிய உணவு வழங்கப்படும்.

மேலும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மதிய உணவு வழங்குவது அதிகரிக்கப்படும். கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் காரைக்குடி அரசு மருத்துவமனையிலும் கூடுதலாக 200 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தேவகோட்டை அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் போதிய அளவு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. இதனை சிறப்பு அலுவலர்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். மேலும் மாவட்டத்தில் 30 மருத்துவா்கள், 80 செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று ஆட்சியர் கூறினார்.

அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் தனபால், மருத்துவமனை நிலைய அலுவலர் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்