ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம்.பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர், கரோனா சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும், படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு குறித்தும் மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். இம்மருத்துவமனையில் 320 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் உட்பட உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன என மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.
சிகிச்சை பெறுவோருக்கு சத்தான உணவு தரமான முறையில் போதிய அளவு வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என கூடுதல் ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் டீன் மற்றும் மருத்துவ அலுவலர்களிடம் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago