சிவகங்கையில் கரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காதோருக்கு
கல்லூரி மாணவர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
கரோனா பரவலால் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஆதரவற்றோர் பலர் உணவின்றி சிரமப்படுகின்றனர். சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
இதற்காக அவர்கள் `உதவும் கரங்கள்' என்ற ஒரு `வாட்ஸ்ஆப்' குழுவை உருவாக்கி, அதன்மூலம் வசூலாகும் பணத்தில் தினமும் இரவு 7 முதல் 10 மணி வரை சிவகங்கை நகர் முழுவதும் உணவில்லாமல் தவிக்கும் ஆதரவற்ற 50 பேருக்கு உணவளிக்கின்றனர்.
இரவு உணவோடு தண்ணீர் பாட்டிலும் சேர்த்து வழங்குகின்றனர்.
பத்து மாணவர்கள் ஒருங்கிணைந்து செய்யும் இப்பணியை உறவினர்கள், நண்பர்கள் ஊக்கப்படுத்தி வருகின்றனர். மொபைல் போன், இணையத்திலேயே முடங்கிக் கிடப்போர் மத்தியில் இந்த மாணவர்களின் ஆக்கப்பூர்வமான செயலைப் பலரும் பாராட்டுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago