ராமநாதபுரம் மண்டிகளில் காலை 10 மணிக்கு மேலும் பழங்களை இறக்கிவைக்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி பழ மொத்த வியாபாரிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் நகர் மொத்த பழ கமிஷன் வியாபாரிகள் சங்க நிர்வாகி வேல்முருகன் தலைமையிலான வியாபாரிகள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், ராமநாதபுரம் மார்க்கெட்டுக்கு மதுரையிலிருந்து சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்படும் பழங்களை காலை 10 மணிக்கு மேலும் மண்டிகளில் இறக்கி வைக்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து மொத்த பழ வியாபாரிகள் கூறியதாவது:
மதுரை மொத்த பழ மார்க்கெட் காலை 6 மணியிலிருந்து 12 மணி வரை செயல்படுகிறது. அங்கு காலை 6 மணிக்கு மேல் பழங்களை வாங்கிக் கொண்டு சரக்கு வாகனங்களில் ராமநாதபுரம் வருகிறோம். ராமநாதபுரம் வர காலை 10 மணி ஆகிவிடும். ஆனால் போலீஸாரும், வருவாய்த் துறையினரும் காலை 10 மணிக்கு மேல் சரக்கு வாகனங்களில் இருந்து மண்டிக்கு பழங்களை இறக்க அனுமதி மறுக்கின்றனர். இதனால் வியாபாரம் பாதிக்கிறது. எனவே, காலை 10 மணிக்கு மேலும் மண்டிகளில் பழங்களை இறக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago