கரோனா விதிமுறைகளை மீறிய 35 கடைகளுக்கு சீல் வைப்பு :

By செய்திப்பிரிவு

கரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின்போது பொதுமக்கள் பாதிக்காத வகையில், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பால், மளிகை, காய்கறி, பழங்கள், நாட்டுமருந்து கடைகள் செயல்பட அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு சில கடைகள் பகல்12 மணிக்கு பிறகும் செயல்படுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, தஞ்சாவூர் கீழவாசலில் நேற்று கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 பேக்கரிகள், மணிமண்டபம் அருகே உள்ள எலெக்ட்ரிக்கல் கடை ஆகியவற்றுக்கு மாநகராட்சி அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டது.

இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட 35 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கரோனா விதிகளை மீறிய 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்