கரோனாவுக்கு 34 பேர் மரணம் :

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கரோனாவுக்கு நேற்று 34 பேர் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாநகரில் 307 பேர், அம்பாசமுத்திரம்- 66, சேரன்மகாதேவி- 54, களக்காடு- 49, மானூர்- 49, நாங்குநேரி- 50, பாளையங்கோட்டை- 69, பாப்பாகுடி- 58, ராதாபுரம்- 55 மற்றும் வள்ளியூர்- 44 பேர் நேற்று கரோனா தொற்றுக்கு ஆளாகினர். 4 பேர் மரணமடைந்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர்- 46 பேர், தென்காசி- 82, சங்கரன்கோவில்- 43,செங்கோட்டை- 38, ஆலங்குளம்- 38, கடையநல்லூர்- 25, குருவிகுளம்- 30, மேலநீலிதநல்லூர்- 14, கீழப்பாவூர்- 26 மற்றும் கடையம்- 11 பேர் நேற்று கரோனா தொற்றுக்கு ஆளாகினர். 6 பேர் உயிரிழந்தனர்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில்ஒரே நாளில் 900க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. 18 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 492 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,632 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 645 பேர் உட்பட இதுவரை 27,661 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 4,792 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனவால் பாதிக்கப்பட்டிருந்த 6 பேர் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது.

கோவில்பட்டி பகுதியில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 5 ஆண்கள் உயிரிழந்தனர். விளாத்திகுளம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்