வியாபாரிகளுக்கு : அடையாள அட்டைகள் :

By செய்திப்பிரிவு

கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மே 10-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கம் காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, இறைச்சி, பழம், தேநீர் கடை, உணவகம் உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, பொது முடக்கம் காலத்தில் வியாபாரிகள் கடைகளுக்கு எளிதாக சென்று, வீடு திரும்பவும், வியாபாரத்துக்கு தேவையான பொருட்களை தடையின்றி எடுத்துச்செல்ல அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என வணிகர் சங்கம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் வணிகர் சங்கம் மூலம் தயாரிக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, 6 ஆயிரம் அடையாள அட்டைகள் வியாபாரிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி வேலூரில் நடைபெற்றது.

வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ஞானவேல் தலைமை வகித்து, வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த அடையாள அட்டையை கொண்டு வியாபாரிகளும், கடை ஊழியர்களும் பொது முடக்கக்காலத்தில் தங்கள் பணிபுரியும் வர்த்தக நிறுவனங்களுக்கு எளிதாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வணிகர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் குமார், நகரச்செயலாளர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்