செவிலியர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் : உதகையில் ஆட்சியர் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

இக்கட்டான நிலையிலும் களப்பணியாற்றி வரும் செவிலியர்கள், என்றென்றும் போற்றுதலுக்கு உரியவர்கள் என உதகையில் நடைபெற்ற செவிலியர்கள் தின விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் பயிற்சிப் பள்ளியில் உலக செவிலியர் தினத்தைப் போற்றும் வகையில் செவிலியர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கேக் வெட்டி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் பேசும்போது ‘‘தற்போது ஏற்பட்டிருக்கும் இக்கட்டான நிலையிலும் களப்பணியாற்றி வரும் செவிலியர்கள், என்றென்றும் போற்றுதலுக்கு உரியவர்கள். அதிலும் பல செவிலியர்களுக்கு தொற்று ஏற்பட்டு, குணமடைந்தவுடன் மீண்டும் பணிக்கு திரும்பி சேவையாற்றி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்கள். மீதமுள்ளவர்களும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்றார். இந்நிகழ்வின்போது, உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பழனிசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்