திருப்பூரில் 120 பவுன் நகை மற்றும் ரூ. 27 லட்சம் கொள்ளை வழக்கில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்-தாராபுரம் சாலை கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சபியுல்லா (53). பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தனது குடும்பத்தினருடன் ஏப்ரல் மாதம் உதகைக்கு சுற்றுலா சென்றுள்ளார். திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின் கதவை உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 120 பவுன் நகை மற்றும் ரூ. 27 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுதொடர்பாக வீரபாண்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பரத் (32), சத்தியமங்கலத்தை சேர்ந்த அப்துல்ஹக்கீ (33), காரமடையை சேர்ந்த கணேஷ்குமார் (34) ஆகியோரை கைது செய்து, ரூ.10 லட்சம், 50 பவுன் நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் திருட்டு நகையை விற்று, பரத் மற்றும் அப்துல்ஹக்கீமுக்கு பணம் பெற்றுத் தந்ததாகக் கூறி, நாமக்கல்லை சேர்ந்த தீப்சித் (26), கோவை குனியமுத்தூரை சேர்ந்த ராஜேஷ் (36), ராஜேந்திரன் (46) ஆகியோரை நேற்று கைது செய்த போலீஸார், 30 பவுன் நகையை மீட்டனர். இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.10 லட்சம் ரொக்கம், 80 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago