திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர், உயிரிழப்போரின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றுமாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர், சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிடுவோரின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, குழந்தைகளுக்கு உணவுடன் கூடிய தங்குமிடம், உளவியல் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகளுக்கான பரிந்துரை செய்யப்படுவதுடன், பாதுகாப்பு மற்றும்பராமரிப்புக்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் உதவி தேவைப்படுவோர், `மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.48, ஜே.என்.ரோடு, திருவள்ளூர் (தொலைபேசி எண்: 044-27665595, சைல்டு லைன்: 1098)' என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago