ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.60 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு நிவாரண உதவிக்கான டோக்கன்ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளது. கரோனா நிவாரணநிதியாக மொத்தம் ரூ.72.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிவாரணத் தொகை முறையாக வழங்கப்படுகிறதா என்பதைக் கண் காணிக்க, 15 ரேஷன் கடைகளுக்கு ஒரு துணை வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago