தி.மலை அண்ணாமலையார் கோயில் சார்பில், திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகள் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட் டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில்கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உணவு வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தி.மலை அண்ணா மலையார் கோயில் நிர்வாகம் சார்பில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகள் மற்றும் மருத்துவமனை வளாகத் தில் தங்கியுள்ள நோயாளிகளின் உறவினர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவுப்படி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 350-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கும் மருத்துவமனை வளாகத்தில் தங்கியுள்ள நோயாளிகளின் உறவினர்களுக்கும் மதிய உணவு நேற்று வழங்கப்பட்டது.
அண்ணாமலையார் கோயில் கண்காணிப்பாளர் ஐயம்பிள்ளை தலைமையில் கோயில் ஊழியர்கள் மதிய உணவை மருத்துவமனை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வரும் நாட்களில் கோயில்சார்பில் தினசரி கரோனா நோயை எதிர்க்கும் சக்தி உள்ள பல்வேறு வகையான சத்தான உணவுகளை வழங்கவும் தற்போதுள்ள எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்கவும் நடவ டிக்கை எடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago