தொழிலாளர்கள் 27 பேருக்கு கரோனா தொற்று - காங்கயம் அருகே நூற்பாலைக்கு ‘சீல்’ :

By செய்திப்பிரிவு

காங்கயம் அருகே நூற்பாலையில் பணியாற்றிய 27 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், நூற்பாலைக்கு நேற்று

‘சீல்’ வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம்வட்டம் சேனாபதிபாளையம் கிராமம் இலுப்பைக் கிணறு பகுதியில் உள்ளது தனியார் நூற்பாலை. இதில், பணிபுரிந்த வந்த தொழிலாளர்களில் 27 பேருக்கு, கடந்த2 நாட்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 27 பேருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்,நிலைய மருத்துவர் நிவேதா மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அதில், கரோனா தொற்று அபாய அறிகுறிகளுடன் இருந்த 7 பேரை கரூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார். எஞ்சிய 20 பேர், நூற்பாலை அருகே தனிமைப்படுத்தி கண்காணிப்பில் உள்ளனர்.

இதையடுத்து, நூற்பாலையில் பணியாற்றி வந்த மேலும் 60 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக, அரசின் விதிமுறையினை பின்பற்றாத நூற்பாலைக்கு, ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவுப்படி, வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ‘சீல்’ வைத்தனர். மேலும் அந்த பகுதி நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, வேலப்பன் வலசு ஊராட்சி மூலம் கிருமி நாசினி உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்