காஞ்சிபுரம் மாவட்டத்தில் - முக்கிய அதிகாரிகள் பலருக்கு கரோனா : தண்டலம் ஊராட்சி செயலர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மகாராணி உட்பட 7 முக்கிய அலுவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 8 போலீஸாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முன்கள பணியாளர்களாக உள்ளசெவிலியர்கள், ஊழியர்கள்உட்பட 15 பேர் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றின் வீரியம அதிகம் இருப்பதால் மக்கள் பலர் அச்சத்துடன் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் ஊராட்சி செயலர் நித்யானந்தம்(31) சளி, காய்ச்சலுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டத்தில் அவருக்கு தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்துஅந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். அவர் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் அளிக்க கோரியும், இதுபோல் பாதிக்கப்படும் ஊவழியர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் ஊராட்சி செயலர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்