நீலமங்கலம் கரோனா சிகிச்சை மையத்தில் - ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் தயாராக உள்ளன : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்து ஆட்சியர் கிரண்குராலா நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியது:

நீலமங்கலம் கிராமத்தில் உள்ள ஏ.கே.டி பள்ளியில் கரோனா தொற்று ஏற்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதி கொண்ட 200 படுக்கைகள், 700 சாதாரண படுக்கைகள் என மொத்தமாக 900 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே உளுந்தூர் பேட்டை, திருக்கோவிலூர், சங்கராபுரம் மற்றம் சின்னசேலம் ஆகிய அரசு பொது மருத்துவமனை களில் 120 படுக்கை வசதிகளுடன் 56 ஆக்சிஜன் உருளைகளும் கையிருப்பில் வைக்கப்பட் டுள்ளன.

மேலும் 4 தனியார் மருத்து வமனைகளில் 160 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை பிரிவு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

இவைதவிர சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அயன்வேலூர் மாதிரி பள்ளி, அ.குமாரமங்கலம் மாதிரி பள்ளி மற்றும் ஜி.அரியூர் மாதிரி பள்ளிகளில் மொத்தம் 670 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்