சிவகங்கை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படாதவர் களுக்கும், தொற்று இருப்பதாகக் கூறி சுகாதாரத் துறையினர் குழப்பி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இம்மாவட்டத்தில் இதுவரை 9,700-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 900-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் கரோனா பரி சோதனை நடைபெறுகிறது.
இங்கு எடுக்கப்படும் சளி மாதிரி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதிக்கப்படுகின்றன. அதன்பிறகு தொற்று உள்ளவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பொது சுகாதாரத் துறைக்கு அனுப்பப்படுகிறது.
சுகாதாரத்துறையினர் தொற்று உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு, மருத்துவமனையில் சேர்த்து வருகின்றனர். ஆனால், சமீபகாலமாக கரோனா தொற்று பாதித்தோர் பட்டி யலில் தவறுதலாக தொற்று இல்லாதவர்களின் பெயரோ, மொபைல் எண்ணோ இடம் பெறுகின்றன. இதையடுத்து சுகாதாரத்துறையினர் கரோனா தொற்று இல்லாதவர்களையும் மருத்துவமனைக்கு வரவழைக் கின்றனர். அங்கு சென்றால் பெயர், மொபைல் எண் மாறி விட்டது என்கின்றனர்.
இதனால் தொற்று இல்லாத வர்கள் மனதளவில் பாதிக்கப் படுகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் பட்டியலை முறையாகத் தயாரித்து, சிகிச் சைக்கு அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘ சளி மாதிரிகளை சேகரிக்கும்போது, மொபைல் எண் (அ) பெயர்களை தவறாகக் கொடுப்பதால் இப்பிரச்சினை ஏற்படுகிறது என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago