தி.மலை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் - ஆக்சிஜன் வசதியுடன் 600 படுக்கைகள் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 600 படுக்கைகள் உள்ளன என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதி, ஆக்சிஜன் சேமிப்பு பகுதி, உணவு தயாரிக்கும் கூடத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமால்பாபு மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,400 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் காய்ச்சல் பரிசோதனை முகாமில் கூடுதல் குழுக்களை அமைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தலா 10 கே.எல் கொள்ளளவு கொண்ட 2 திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக தினசரி 4 முதல் 5 கே.எல் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. எரிவாயு முகவர்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் நிரப்பப்படுகிறது. மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 600 படுக்கைகள் உள்ளன. மேலும், தி.மலை பழைய அரசு மருத்துவமனை மற்றும் ஆயுஷ் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 400 படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொடர்பான மருத் துவ ஆலோசனைகள், படுக்கை வசதிகள் விவரம் மற்றும் சந்தேகங்களை 04175 – 1077, 04175 – 233344, 04175 – 233345 ஆகிய எண்களிலும் மற்றும் 88707-00800 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்