ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (65). சமையல் கலைஞரான இவர், திருப்பூர் சிக்கண்ணா செட்டியார் வீதியில் தங்கி உணவகத்தில் வேலை செய்து வந்தார். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது மன்சூர் (28) உணவகத்தில் சப்ளையராக பணிபுரிந்து வந்த அடிப்படையில், கருப்பையாவுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 4-ம் தேதி தனது நண்பர்களுடன் கருப்பையா, சிக்கண்ணா செட்டியார் வீதியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த முகமது மன்சூர், குடி போதையில் கருப்பையாவிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் எழுந்தது. அப்போது கருப்பையாவை கல்லால் மன்சூர் தாக்கினார். இதில் படுகாயமடைந்த கருப்பையா, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுதொடர்பாக தெற்கு போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிந்து, முகமது மன்சூரை கைது செய்தனர். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி கடந்த 8-ம் தேதி இரவு கருப்பையா உயிரிழந்தார். இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago