முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள் ளதால், சிவகாசியில் அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டன. இதனால் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
சிவகாசியில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நேரடியாக 3 லட்சம் தொழிலாளர்களும், பட்டாசு உப தொழில்கள் மூலம் 5 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறு கின்றனர். கரோனா 2-வது அலையால் மே 24-ம் தேதி வரை, தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் பட்டாசு தொழிலும் முடக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
இது குறித்து பட்டாசு உற்பத்தி யாளர்கள் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த ஆண்டு 3 முறை ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களும் வேலை இழந்தனர். தற்போது கரோனா வைரஸ் பரவல் 2-வது அலையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.1000 வழங்குவதாக கடந்த ஆண்டு முதல்வர் அறிவித்து வழங்கினார்.
தற்போது தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குவதாகவும், அதில் முதல் தவணை ரூ.2 ஆயிரம் தற்போது வழங்குவதும் வரவேற்புக்குரியது.
தீப்பெட்டி உற்பத்தி அத்தியா வசியப் பொருள் தயாரிப்பு என்று கூறி 50 சதவீதத் தொழிலாளர் களுடன் உற்பத்தியை மேற் கொள்ள அரசு அனுமதி அளித் துள்ளது. இதேபோல் பட்டாசு உற்பத்தி மற்றும் உற்பத்தி யாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 50 சதவீதப் பணியாளர் களுடன் உற்பத்தியை மேற் கொள்ள அரசு அனுமதிக்க வேண் டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago