கூலி உயர்வு கேட்டு சங்கரன்கோவிலில் - விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விசைத்தறி தொழிலாளர்கள் 50 சதவீதம் கூலி உயர்வு, விடுப்புஊதியம் ரூ.450 வழங்க வேண்டும்என வலியுறுத்தி, கடந்த மாதம்12-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி மதிப்பில் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், 12-ம் கட்டபேச்சுவார்த்தை வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக, இருதரப்பினரும் ஆலோசித்து முடிவுஎடுக்குமாறு தொழிலாளர் துறைஆணையர் குமரன் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஜவுளிஉற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் நடத்திய ஆலோசனையில் சுமூக முடிவு ஏற்படவில்லை.

இதையடுத்து, விசைத்தறி தொழிலாளர்கள் சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரோனா பரவலை கருத்தில்கொண்டு 7 இடங்களில் குறைந்த எண்ணிக்கையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்க நிர்வாகிகள் ரத்னவேல், லெட்சுமி, மாணிக்கம், சுப்பிரமணியன், சக்திவேல், மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE