வேளாண் ஆலோசனைக் குழு அமைக்க முதல்வருக்கு கோரிக்கை :

By செய்திப்பிரிவு

வேளாண்மை தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க விவசாயிகளைக் கொண்ட மாநில அளவிலான ஆலோச னைக் குழுவை அமைக்க தமிழக முதல்வருக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணை பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடியை விவசாயிகள் சிறப்பாக மேற்கொண்டனர். அதேபோல, நிகழாண்டிலும் அணையில் தேவையான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால், ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடிமராமத்துப் பணிகளை தொடங்கி, கால் வாய்களை தூர் வார வேண் டும்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் பின்பற்றியதுபோல, வேளாண் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள நீர்ப்பாசனத் துறை, வேளாண் துறை, உணவுத் துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர்களை காவிரி டெல்டா பகுதிகளுக்கு அனுப் பிவைத்து, விவசாயிகளின் கருத்தை அறிந்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அரசுக்கு வேளாண்மை தொடர்பான ஆலோசனைகளை வழங்க பதிவுபெற்ற விவசாய சங்க நிர்வாகிகளை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவை ஏற்படுத்த வேண்டும். டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேட்டூர் அணை- சரபங்கா உபரிநீர் திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்