கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு : வீடு தேடி சென்று உணவு வழங்கல் : சத்ய சாய் சேவா நிறுவனம் ஏற்பாடு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துக்கு 7 நாட்கள் உணவு வழங்கும் திட்டத்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் சத்ய சாய் சேவா நிறுவனம் தொடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்ய சாய் அமுதம் என்ற திட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து உணவு வழங்கப்படுகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்பட்டு உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வீடு தேடி சென்று உணவு வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இரு வேளைக்கு தேவையான அளவுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

கலவை சாதம், காய்கறி பிரியாணி, மிளகு சாதம், புளியோதரை, சாம்பார் சாதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சாதம் மற்றும் கூட்டு, சுண்டல், தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை நகரில் வசிப்பவர்கள் 94438-10829, 94432-22326 மற்றும் ஆரணி நகரில் வசிப்பவர்கள் 94423-80474, 98940-64495 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், அவர்களது வீட்டு வாசலில் உணவு வைக்கப்படும். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்