ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை களில் கரோனா நோயாளிகளுக்கு அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம் நேற்று நடை பெற்றது. தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் இளம்பகவத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), ஏ.எம்.முனிரத்தினம் (சோளிங்கர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, ‘‘கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதில் இருந்து பொதுமக்களை காக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனை வரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். தினசரி 2 ஆயிரம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் விவரம் நம்மிடம் தயாராக உள்ளது. அவர்கள், அனைவரும் தடுப்பூசி போட்டார்களா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்களில் 45 வயதுக்கு மேற்பட் டவர்களுக்காக பிரத்யேக தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். பொதுமக்கள் அலட்சியாக இல்லாமல் விழிப்புடன் இருந்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத் துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
பின்னர் அமைச்சர் ஆர்.காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக் கப்படும். அதேபோல், தனியார் மருத்துவமனைகளுக்கும் போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத் தில் இதுவரை சுமார் 30 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் சுமார் 3,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. கரோனா தொற்று சிகிச்சைக்காக அரசின் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க தனியார் மருத்து வமனைகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது’’ என்றார்.
இதனைத் தொடர்ந்து, வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை யில் அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்ததுடன், அங்குள்ள ஆக்சிஜன் விநியோக கட்டமைப்பு வசதியையும் அவர் ஆய்வு செய் தார். கரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவமனை கட்டமைப்பு வசதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago