முஷ்ணம் அருகே ஏரியில் மணல் அள்ளிய லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
முஷ்ணம் அருகே ஆண்டிப்பாளையம் பகுதியில் புது ஏரி உள்ளது. சாலை விரிவாக்க பணிக்காக இந்த ஏரியில் கடந்த சில நாட்களாக 50-க்கும் மேற்பட்ட லாரிகள் தினமும் மணல் அள்ளி செல்கின்றன. இதனால் சாலை முழுவதும் தூசி மண்டலமாக காணப்படுவதா இப்பகுதி மக்கள் அவதியடைந்து வந்தனர்.
அப்பகுதி பொதுமக்கள் மணல் அள்ளிக் கொண்டு ஆண்டிப்பாளையம் வழியாக செல்லக்கூடாது என நேற்று லாரிகளை சிறைபிடித்தனர். அதற்கு லாரி ஓட்டுநர்கள் ஒத்துக் கொண்டனர். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட லாரிகள் விடுவிக்கப்பட்டன. லாரிகள் ஆண்டிப்பாளையம் வழியாக செல்லாமல் கொண்டசமுத்திரம் வழியாக சிறிய பாதையில் சென்று வருகின்றன.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொண்டசமுத்திரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் சார்- ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago