இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு்ள்ளன.
கரோனா இரண்டாவது அலையில் உயிரிழப்பு, தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. நேற்று அனைத்துக்கடைகள் திறந்திருக்கவும், போக்குவரத்திற்கும் முழு அனுமதியளிக்கப்பட்டது.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளில் அதிகளவில் மக்கள் திரண்டதால் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். டோக்கன் முறையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. சில வீதிகளில் கட்டுக்கடங்கா கூட்டம், வாகனநெரிசல் இருந்தது.
பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. தென்மாவட்டங்களுக்கு அதிகளவிலான வாகனங்கள் சென்றதால், சென்னை- திருச்சி நான்குவழிச் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் காவல்துறையினர், மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் உள்ளனர். குறிப்பாக விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அங்கு காவல்துறை, சுகாதாரம், வருவாய்த் துறையினர் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் விழுப்புரம் நகரத்திற்கு வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதல் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். அப்படி வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடலூர்
இதே போல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 11 எல்லை பகுதிகளும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் எல்லை பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அங்கு காவல்துறை, சுகாதாரம், வருவாய்த் துறையினர் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago