கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - புதிதாக 861 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 478 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 33,670 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 413 பேர் உட்பட 30,906 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 1,800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 360 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 383 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 2,611 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 2 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 280 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நேற்று வரை 13,952 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 12,786 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,048 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்