புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு - ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் கூடுதலாக வழங்க வேண்டும் : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கோரிக்கை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடு லாக ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்க வேண்டும் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நேற்று கோரிக்கை மனு அளித்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் 450 படுக்கைகள் உள்ளன. இதில், 320 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிக ரித்து வருகிறது. ஆனால், ஆக்சி ஜன், உயிர்காக்கும் மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன.

இதையடுத்து, இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதலாக ஆக்சிஜன், ரெம்டெசி விர் மருந்துகளை வழங்குமாறு மாநில மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், புதுக் கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி எம்எல்ஏவும் மாநில சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்ச ருமான சிவ.வீ.மெய்யநாதன் நேற்று கோரிக்கை மனு அளித்தார்.

மனு விவரம்: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க 3,720 லிட்டர் ஆக்சிஜன் தேவை. ஆனால், இங்கு 2,500 லிட்டர்தான் இருப்பில் உள்ளது. எனவே, நாள்தோறும் 6 ஆயிரம் லிட்டர் அளவுக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும்.

மேலும், இங்கு ரெம்டெசிவிர் மருந்துகள் 198 என்ற எண்ணிக் கையில் தான் உள்ளன. கூடுலாக 2 ஆயிரம் மருந்துகளை அனுப்ப வேண்டும். மருத்துவமனைக்கு கூடுதலாக 300 ஆக்சிஜன் கண்காணிப்பு மீட்டர்கள் தேவைப் படுகின்றன என தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கை மனுவை பெற்ற பிறகு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கூடுதலாக 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கொண்டு வந்து நிரப்பப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்