ஊரடங்கில் விற்பனை செய்ய கடத்தப்பட்ட 3,576 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று (மே 10) முதல் மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் ஊரடங்கு காலத்தில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதற்காக மதுபா னங்களை பதுக்கி வைக்க கடத்தி செல்வதாக கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) ராதாகிருஷ்ணன், காவல் துணை கண்காணிப் பாளர்கள் முகேஷ்ஜெயகுமார், ரவிச்சந்திரன், சசிதர் ஆகியோர் தலைமையில் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது.
இதில், ஊரடங்கின்போது விற்பனை செய்ய கடத்தப்பட்ட, 3,576 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுபானங்களை கடத்தியதாக 26 பேர் கைது செய் யப்பட்டனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய 6 கார்கள், 4 இரு சக்கர வாகனங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுபான கடத்தல், பதுக்கல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி வழக்குகள் பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் ஜி.சசாங்சாய் எச்சரித்துள் ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago