கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க 2,039 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி.விஜயராஜ்குமார் தெரிவித்தார்.
தமிழக அரசு மாற்றுத்திறனா ளிகள் நலத் துறையின் அரசு முதன்மைச் செயலரும், கரூர் மாவட்டத்துக்கான கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலருமான சி.விஜயராஜ்குமார் நேற்று முன் தினம் தாந்தோணிமலை அரசு கலை கல்லூரியில் கரோனா தொற்றா ளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 150 படுக்கை வசதிக ளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவுடன் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத் தில் சுகாதாரம், வருவாய், வளர்ச்சித் துறைகளின் தலைமை அலுவலர்களுடன் கரோனா தொற்று தடுப்பு குறித்து மேற்கொள் ளப்பட்டு வரும் நடவடிக்கை கள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியது: வேகமாக பரவிவரும் கரோனா தொற்றின் 2-வது அலையில் இருந்து பொது மக்களை காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழுஒத்துழைப்பு அளிக்க வேண் டும். அரசின் நிலையான வழி காட்டுதல் நெறிமுறைகளை மீறும் தொழில் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 300 மற்றும் 7 அரசு மருத்துவமனைகளில் 305, தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 90, கரூர் பழைய மருத் துவமனையில் 250, தாந்தோ ணிமலை அரசு கலைக்கல்லூரியில் 150, புலியூர் தனியார் பொறியியல் கல்லூரியில் 127, காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 50, தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் 500, பிற தனியார் மருத்துவமனைகளில் 267 என மொத்தம் 2,039 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
மாவட்டத்தில் நாள்தோறும் 2,000 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிர மணியன், குளித்தலை சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ஞானக்கண் பிரேம்நவாஸ், சுகாதார பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார், கரூர் நகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago