கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 117 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்றுவரை 13,668 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 12,688 பேர்சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 862 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 319 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நேற்றுவரை 22,031 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 19,245 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,647 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 139 பேர் உயிரிழந்துள்ளர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று 519 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 33,186 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 384 பேர் உட்பட 30,419 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 1,811 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 7 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago