தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவைத் தொடர்ந்து, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் 498 நகர் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக நேற்று முதல் பயணம் செய்தனர்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றவுடன் அறிவித்த 5 முக்கிய அறிவிப்புகளில் கரோனா காலத்தில் அரசு நகர் பேருந்துகளில் பணிக்குச் செல்லும் பெண்கள், உயர் கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் இலவசம் என அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நகர் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி நேற்று முதல் பயணிக்கத் தொடங்கினர். விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம் அரசு போக்குவரத்து பணிமனைகளிலிருந்து 237 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சிட்டி எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். பேருந்துகள் தவிர மற்ற 50 சதவீதம் இயக்கப்படும் 118 நகர் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டுள் ளனர். இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், அனைத்து பகுதிகளிலும் இயக்கப் படும் நகர் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்.
மேலும், பயணிகள் அறியும் வகையில் பேருந்தின் முகப்பில் "மகளிர் இலவச பயண அனுமதி" என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதைப்பார்த்து பயணிகள், குறிப்பாக பெண்கள் அறிந்து கொண்டு அப்பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றனர்.
மதுரை
இத்திட்டத்தில் மதுரை மாவட்டம் உள்ளடங்கிய மதுரை மண்டலத்தில் 380 பேருந்துகள் இயக்கப்பட்டன. மதுரை நகருக்குள் மட்டும் 140 பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பேருந்துகளை பெண்கள் எளிதில் கண்டறியும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இப்பேருந்துகளில் பெண்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago