சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பழைய அரசு தலைமை மருத்துவமனை, காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை, அமராவதிபுதூர் காசநோய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 10,000 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கூடுதலாக ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடங்கு அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளர் ரத்தினவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago