கரோனா ஊரடங்கு உத்தரவு கார ணமாக, விலைவீழ்ச்சி ஏற்பட்ட தால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் விற்பனைக்கு வந்த பூக்கள் குப்பையில் கொட் டப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, கீரமங்கலம், செரிய லூர், சேந்தன்குடி, நகரம், கொத்த மங்கலம், அணவயல், மாங்காடு, பனங்குளம், மழையூர், வம்பன், திருவரங்குளம் உள்ளிட்ட பகுதி களில் அதிக அளவில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், ரோஜா, சம்பங்கி போன்ற பூ வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பூக்கள் வடகாடு, மாங்காடு, கீரமங் கலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு, பிற மாவட்டங்களில் விற்பனை செய் யப்பட்டு வருகின்றன.
கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள தால் திருவிழாக்கள் நடத்தப்படு வதில்லை. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந் துள்ளது.
அதாவது, கிலோ ரூ.500, 1000-க்கு விற்க வேண்டிய மல்லிகை, முல்லை பூக்கள் கிலோ ரூ.50, 80-க்கு விற்பனை செய்யப்ப டுகின்றன. அதேபோல, சம்பங்கி பூ கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப் பட்டது. வாங்கும் பூக்களையும் கடைக்காரர்கள் வெளியூர்களில் கொண்டு சென்று விற்க முடிய வில்லை.
எனினும், வாடிக்கையாளர் களிடம் கொள்முதல் செய்யாமல் இருக்க முடியாது என்பதால் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி குப்பையில் கொட்டப்பட்டு வரு கிறது. இதனால், கீரமங்கலத்தில் மட்டுமே தினமும் 3 டன் பூக்கள் குப்பையில் கொட்டப் படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக் கின்றனர்.
இதுகுறித்து கீரமங்கலம் பூ மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங் கால் திருவிழாவோ, சுப நிகழ்ச்சி களோ நடைபெறாததால் விவசாயி களிடமிருந்து வாங்கப்படும் பூக்களை விற்க முடிவதில்லை. எங்களிடம் வாடிக்கையாக பூக்கள் கொண்டு வரும் விவசாயிகளிடம், வாங்க முடியாது என கூற முடியவில்லை. அப்படி கூறினால், அவர்கள் வேறு வியாபாரியிடம் சென்றுவிடுவார்கள். இதனால் வாடிக்கையாளர்களை இழக்கும் சூழ்நிலை ஏற்படுவதால், குறைந்த விலைக்கு பூக்களை வாங்கிக் கொள்கிறோம். முடிந்தவரை விற்பனை செய்துவிட்டு, மீதமுள் ளதை குப்பையில் தான் கொட்டு கிறோம்’’ என்றார்.
அதேபோல, அன்றாடம் செடிகளில் இருந்து பறிக்கும் கூலிக்குக்கூட கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயி களும் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயி சேந்தன் குடி தங்க.கண்ணன் கூறியது: கரோனா ஊரடங்கால் பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகளிடம் இருந்து பூக்களை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்ய வேளாண் விற் பனைத் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டுள்ள விவ சாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago